தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மைதானத்திற்கு வெளியே பந்தை அனுப்ப காத்திருக்கும் பேட்ஸ்மேன்கள்!

ஐபிஎல் என்றாலே தூள் பறக்கும் சிக்ஸர்களுக்கு பஞ்சம் இருக்காது. இவ்வொரு ஆட்டத்திலும் வானத்தில் மத்தாப்பு கொளுத்துவதுபோல் பந்துகள் பறந்து கொண்டே இருக்க வேண்டும். அதுதான் ஐபிஎல் போட்டிகளின் அழகும்கூட. பார்க்கும் பார்வையாளர்களுக்கு பிரம்மிப்பையும், பொழுதுபோக்கையும் அளிக்க வேண்டும்.

எம்.எஸ்.தோனி

By

Published : Mar 21, 2019, 11:52 PM IST

அந்த மாதிரி சிக்ஸர்களை அனைத்து வீரர்களும் அடிக்கலாம். ஆனால் ஒவ்வொரு அணியிலும் ஒரு பவர் ஹிட்டர்கள் இருப்பார்கள். அவர்கள் அடித்தால் ரசிகர்களின் குதூகலம் எல்லையை கடந்து செல்லும். இந்திய முன்னாள் கேப்டன் தோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்களுக்கு மயங்காத கண்கள் உலகில் உண்டா என்ன.. அதுபோல் இந்த சீசனில் பவர் ஷாட்களால் கலக்க காத்திருக்கும் வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

எம்.எஸ்.தோனி :

தோனியின் மனநிலை எப்போதும் இன்றுதான். ஆட்டத்தை இறுதிவரை எடுத்து சென்றால் முடிவு நிச்சயம் சாதகமாக அமையும். எவ்வளவு பெரிய ஸ்கோரானாலும் எவ்வாறு ஆட வேண்டுமோ, அவ்வாறு ஆடி ஆட்டத்தை இறுதிவரை எடுத்துசென்று வானில் சரவெடிகளைப் பறக்கவிட்டு ஆட்டத்தை முடிப்பார். அதுவும், ஐபிஎல் போட்டிகளில் கடைசி நான்கு ஓவர்களில் தோனி நின்றால் எதிரணியினர் பவுண்டரி எல்லையிலேயே போய் நின்றுவிடலாம் எனும் அளவுக்கு சிக்ஸர்களும், பவுண்டரிகளும் விளாசுவார்.

ஏ.பி.டி வில்லியர்ஸ்

ஏ.பி.டி வில்லியர்ஸ் :

கிரிக்கெட்டின் மிஸ்டர். 360 என உலக கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படுபவர். மைதானத்தின் அனைத்து பகுதியிலும் சுத்தி சுத்தி அடித்து அமர்க்களப்படுத்துவார். கிரிக்கெட்டில் 31 பந்துகளில் சதம் அடித்தவர். எந்த பந்தை எப்படி அடிக்கபோகிறார் என எதிரணியினர் பயம்கொள்ளும் அளவிற்கு அட்டகாசப்படுத்துவார். இவரது விக்கெட்டை வீழ்த்த பவுலர்கள் மண்டையை பிய்த்துகொள்ளும் அளவிற்கு அபாயகரமான வீரர். பெங்களூர் அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவர். சமீபத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அட்டகாசப்படுத்தி பார்மில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்த சீசனில் மிச்டர்.360-யின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் எல்லோரும் செம வெயிட்டிங்..

கெய்ரன் பொலார்ட் :

ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடக்கம் முதலே மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடும் அனுபவம் வாய்ந்த வீரர். சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆடும் திறன் கொண்டவர். பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் மும்பை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றவர். மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர். இவர் அடிக்கும் சிக்ஸர்கள் மைதானத்திற்கு வெளியில் மட்டுமே செல்லும் அளவுக்கு பவர் ஹிட்டர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு மட்டுமே இருக்கும் வலுவான ஹேண்ட் பவர் இவருக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

ஜோஸ் பட்லர்

ஜோஸ் பட்லர் :

மும்பை அணிக்கு கிடைத்த அற்புதமான தங்கசுரங்கத்தை ராஜஸ்தான் அணிக்கு தாரை வார்த்தது என்றே கூறலாம். கடந்த சீசனில் இவர் தொடக்க வீரராக களமிறங்கி தனது அற்புதமான ஹிட் ஷாட்களால் ராஜஸ்தான் அணியை அரையிறுதி வரை கொண்டு சென்றவர். சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான போட்டியில், 77 பந்துகளுக்கு 150 ரன்கள் குவித்து அட்டகாசமான தொடக்கம் கொடுக்க காத்திருக்கிறார் பட்லர்.

கிரிஸ் மோரிஸ்

கிரிஸ் மோரிஸ் :

கடந்த இரண்டு சீசன்களில் திருமலை நாயக்கர் தூணாக நின்று டெல்லி அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர். டாப்-ஆர்டர் சரிந்தால் டெல்லி அணியில் இருக்கும் ஒரே ஆயுதம் இவர்தான். இவர் அடித்தால் பந்து பவுண்டரி லைனை தாண்டாமல் இருந்ததில்லை. குஜராத் அணிக்கு எதிராக 9 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து பல அணிகளுக்கு திகிலூட்டியவர். இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிலிருக்கும் மிகச் சிறந்த ஹிட்டர் என்றால் மோரிஸ் மட்டுமே.


இவர்களின் சிக்சர் சரவெடிகளை காண்பதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details