தர்மசாலா :உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (அக். 10) இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, வங்காளதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இன்று தர்மசாலாவில் நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதேபோல் வங்காளதேச அணியும் தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.
முதல் ஆட்டத்தில் கண்ட வெற்றியின் காரணமாக இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்திவிடலாம் என வங்காளதேசம் எளிதில் எடுத்துக் கொள்ளக் கூடாது. இங்கிலாந்து அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இன்னும் காயத்தில் இருந்து பூரண குணமடையவில்லை என கூறப்படுகிறது.
அதனால் இன்றைய ஆட்டத்திலும் அவர் களமிறங்குவது சந்தேகம் தான். அவருக்கு பதிலாக ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டத்திலும் கேப்டனாக நீடிப்பார் எனத் தெரிகிறது. லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், மொயின் அலி உள்ளிட்டோர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அது வங்காளதேசத்திற்கு கடும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.