தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 13, 2021, 10:53 PM IST

ETV Bharat / sports

ஓர் ஆண்டுக்குப் பிறகு பார்வையாளர்களுடன் கிரிக்கெட், அதிரவிட்ட சென்னை ரசிகர்கள்!

ஓர் ஆண்டுக்குப் பிறகு மைதானத்தில் நேரடியாக கிரிக்கெட் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி. அதுவும் சென்னையில் இப்படியொரு சம்பவம் என்றால் இதைவிட வேறு எதுமே வேண்டாம் என கிரிக்கெட் ரசிகர்களின் ஒரு மித்த கொண்டாட்ட குரலாக ஒலிக்கச் செய்திருக்கிறது சேப்பாக்கம் டெஸ்ட்.

Cricket in chepauk stadium
சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி

இங்கிலாந்து அணி, இந்தியா சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கும் போட்டிகளின் அட்டவணையை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிசிசிஐ வெளியிட்டது. அப்போதிருந்தே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் தொற்றிக் கொண்டது.

இதில், குறிப்பாக அப்பட்டியலைப் பார்த்த சென்னை ரசிகர்கள் டபுள் ட்ரீட் கிடைத்த உற்சாகத்தில் இருந்தனர். ஏனென்றால் கிட்டத்தட்ட ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்திய மண்ணில் கிரிக்கெட் ரீ - ஸ்டார்ட் ஆகிறது, அதிலும் முதல் போட்டி சென்னையில் விளையாட இருப்பதுடன், இரண்டாவது போட்டியும் இங்கேயே நடக்க இருப்பது, சிவாஜி படத்தில் ரஜினிக்கு போன் காலில் கிடைத்த அதிர்ஷ்ட ஒரு ரூபாய் போன்றே உணர்ந்தார்கள்.

அட்டவணை வந்தாலும், கரோனா அச்சுறுத்தல் மக்கள் மனதில் நீங்காமல் இருந்த சூழ்நிலையில், கிரிக்கெட்டை பார்த்து ரசிக்க, ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்விகள் தொக்கி நின்றன. அதற்கு 'இல்லை' என வியப்பை ஏற்படுத்தும் பதிலை பிசிசிஐ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கிரிக்கெட் ஆட்டம் தொடங்கினாலும் கரோனா ஆட்டம் இன்னும் முடியவில்லை என்பது அழுத்தமாக சொல்லும் விதமாக இருந்த இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

ஊரடங்கில் டிவி, மொபைல் என சகலங்களையும் பார்த்து பழகிப்போன ரசிகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என ஊடகங்களின் மூலம் விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

ஆனால், மொத்த நகருக்கும் ஊரடங்கிலிருந்து விலக்கு அளித்து தற்போது சேப்பாக்கத்துக்கு மட்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டிருத்து எந்த விதத்தில் நியாயம் என்று தங்களது மனக்குறைகளை சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமாக "அறிவுமிக்க ரசிகர்கள்" என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமிடம் பெயரெடுத்த நம்மவர்கள் அனைவரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதில், பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவை அவர்கள் வரவேற்கவும் தவறவில்லை.

சுமார் ஒரு வருடமாக கிரிக்கெட் பந்துகளை பார்க்காத இந்திய மைதானங்களில், நீண்ட ரெஸ்டுக்கு பிறகு பிப்ரவரி 5ஆம் தேதி இந்தியா - இங்கிலாந்துக்கு இடையே வீசப்பட்ட பந்தின் மூலம் புத்துணர்ச்சி கண்டது. நாடெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இதனை தங்களது ஷேரிங்ஸ் மூலம் வைரலாக்கினர்.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ரோஹித்

இந்தப் போட்டியில் முதல் நாளிலிருந்தே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி, இறுதி நாளில் இந்தியாவை இமாலைய ரன் வித்தியாசத்தில் தோற்டித்து வெற்றியை ருசித்தது. இந்த தோல்விக்கு வீரர்களி மீது குறை கூற எதுவுமில்லாமல் பிட்ச் மீது பழி போடப்பட்டது.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச்

ஆனால் இதையும் மீறி மற்றொரு விஷயம் கிரிக்கெட் வல்லுநர்கள் மட்டுமல்ல, வீரர்களும் தவறவிட்டது என்றால் அது ரசிகர்களின் ஆராவாரமும், வீரர்களுக்கு அவர்கள் தரும் எனர்ஜியான உற்சாகமும் தான்.

இதை அழுத்தமாக சொல்ல வேண்டுமானால், சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இரு அணிகளையும் தாண்டி, போட்டியைக் காண வரும் ரசிகர்களின் ஆரவாரம் அப்போட்டியை வரலாற்றுச் சுவடுகளில் தனித்துவமான இடத்தை பெற்றுத் தர தவறுவதில்லை.

இந்த உண்மையை வரலாற்றின் பக்கங்களை சற்று புரட்டிப் பார்த்தால் உணர முடியும். இதனை கொஞ்சம் லேட்டாக புரிந்து கொண்ட பிசிசிஐ, 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் சொன்னதுடன், இரண்டாவது டெஸ்டை ரசிகர்கள் முன்னிலையில் நடத்த முடிவு செய்தது. இதற்கு ஏற்றவாறு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், விளையாட்டை பார்க்க வரும் ரசிகர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளையும் வெளியிட்டது.

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சென்னை' என்பது போல்இந்த ஒற்றை அறிவிப்புக்காக காத்திருந்த அனைவரும் அடுத்த சேப்பாக்கத்துக்கு படையெடுக்க ஆயுத்தமானார்கள். இதற்கு அடுத்து டிக்கெட் விற்பனை நாளை எதிர்நோக்கி, அன்றே அனைத்தையும் புக்கிங் செய்து காலி செய்தனர். டிக்கெட்டுகள் நேரில் வாங்க மைதானத்துக்கு வந்தபோதும் நாங்கள் கட்டுப்பாடு மிக்கவர்கள் என்பதை வெளிகாட்டும் விதமாக தகுந்த பாதுகாப்புடன் டிக்கெட்டுகளை வாங்கி பிப்ரவரி 13ஆம் தேதிக்காக காத்திருந்தனர்.

டாஸ் போடும் முன் இரு அணியின் கேப்டன்கள் விராத் கோலி - ஜோ ரூட்

அந்த நாளும் வந்தது, கட்டுப்பாடுகள் என அனைத்தையும் கடந்து விரிந்த கண்களுடன் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்குள் ஆராவாரத்துடன் மீண்டும் நுழைந்தனர் சென்னை ரசிகர்கள். ஆண்டுதோறும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு மதுரைக்காரர்கள், கும்பமேலாவுக்கு சிவனாடியார்கள் வெளிப்படுத்தும் கொண்டாட்ட 'மோடில்' சென்னையில் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தில் கிரிக்கெட் திருவிழாவை கொண்டாடினர்.

நீண்ட நாள்களுக்கு பிறகு மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை காணும் ஆரவாரத்தில் ரசிகர்கள்

சென்னை மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலிருந்து இந்த கிரிக்கெட் திருவிழாவைக் காணுவதற்கு என்றே படையெடுத்து வந்துள்ளனர், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு டி20, ஒரு நாள் போட்டி போன்று கூட்டம் கூடாது என்ற பேச்சு சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கு பொருந்ததாது என்பதை மீண்டும் நிரூபித்தனர் ரசிகர்கள்.

பேட்டிங்குக்கு இடையே ரோஹித் - புஜாரா

50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு, சுமார் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிக்கெட் ஏதும் மிச்சாமில்லாமல் அனைத்து டிக்கெட்களையும் புக் செய்தனர்.

தமிழ்நாடு அரசு அறிவுறுத்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கை கடைபிடிக்கப்பட்டு ரசிகர்கள் அனுமதிக்கபட்டனர். தனி மனித இடைவெளியை கடைபிடித்து கிரிக்கெட் மீது காதல் கொண்ட ரசிகர்கள் அனைவரும் தங்களது காதலர் தினத்தை இன்றே கொண்டாடினர்.

கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பின்னர் நடைபெறும் போட்டிக்கு அனுமதி தந்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது, உள்ளே செல்வதற்கு முன் தமிழ்நாடு அரசு அறிவுறுத்திய உடல் வெப்ப பரிசோதனை, முகக்கவசம் அணிந்து இருப்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே அனுமதிக்கின்றனர் என பொதுமக்கள் கூறுகின்றனர். இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இல்லை. 20 ஓவர் போட்டி போல் உள்ளது என தங்களது முதல் நாள் ஆட்ட நிகழ்வுகளை ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர்.

மாஸ் ஹீரோ படத்தை விசில், கைதட்டல், ஆட்டம் என ஆரவாரத்துடன் பார்த்து முகம் முழுக்க மகிழ்ச்சி புன்னகையுடன் திரையரங்கை விட்டும் வெளியே வருபவர்களின் ஃபில் இன்று சேப்பாக்கத்தில் காண முடிந்தது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்த ரசிகர்கள்

இதையும் படிங்க: 2ஆவது டெஸ்ட்: ரோஹித், ரஹானே அசத்தல்; இந்திய அணி முன்னிலை!

ABOUT THE AUTHOR

...view details