மொடீரா மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழத்தியது. இதன் பின்னர் பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, "இந்த ஆடுகளத்தில் எந்த மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அறியாமல் விளையாடினோம். சரியான ஷாட்களை தேர்ந்தெடுத்து ஆடுவதில் இனி கவனமாக இருக்க வேண்டும்.
வீரர்கள் அனைவரும் தங்களது தவறுகளை ஒப்புக்கொண்டு அடுத்த போட்டியில் சரியான நோக்கத்துடன் மீண்டு வர வேண்டும். பந்து வீச்சாளர்கள் விரும்பும் ஷாட்களை ஆடாமல், தெளிவாக நாம் விரும்பும் ஷாட்களை பேட்ஸ்மேன்கள் ஆட வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு தொடக்கத்திலிருந்து ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஷ்ரேயாஸ் அவ்வாறு சரியாகக் கணித்து ஆடியதால் கெளரவமான ஸ்கோரை எட்டினோம். இந்தத் தோல்வியை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம்" என்று கூறினார்.