தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 17, 2022, 8:48 PM IST

ETV Bharat / sports

இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலக சாதனை

நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 498 ரன்கள் விளாசி இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலக சாதனை
இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலக சாதனை

ஆம்ஸ்டர்டாம்:நெதர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. அந்த வகையில், முதல் போட்டி இன்று (ஜூன் 17) ஆம்ஸ்டெல்வீனில் தொடங்கியது.

முதலில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் பீட்டர் சீளார் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து வீரர்கள் களமிறங்கினர். 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 498 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக டேவிட் மெலன் 109 பந்துகளுக்கு 125 ரன்களையும், பில் சால்ட் 93 பந்துகளுக்கு 122 ரன்களையும் குவித்து சாதனை படைத்தனர்.

இவர்களையடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் 22 பந்துகளுக்கு 66 ரன்களை எடுத்து அசத்தினார். மறுப்புறம் பந்துவீச்சில் நெதர்லாந்து கேப்டன் பீட்டர் சீளார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் அதிக ரன்களை குவித்த சாதனையை படைத்துள்ளது. முன்னதாக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 481 ரன் எடுத்தது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:IND VS SA: தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சு தேர்வு

ABOUT THE AUTHOR

...view details