தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ENGvsIND: அணிக்குத் திரும்பும் மொயின் அலி! - இங்கிலாந்து அணி பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் மொயின் அலியை, அணியில் சேர்ப்பது குறித்து யோசித்துவருவதாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.

moeen
மொயின் அலி

By

Published : Aug 11, 2021, 6:17 AM IST

Updated : Aug 11, 2021, 7:39 PM IST

லண்டன் (இங்கிலாந்து): இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி, மழை காரணமாக டிரா செய்யப்பட்டது

இதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஆக. 12) புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில், நாளைய இங்கிலாந்து அணியில் மொயின் அலி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அணியுடன் அவர் நேற்று (ஆக. 10) பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு பேட்டிங் வரிசை வலுவில்லாமல் இருப்பதால், பின்வரிசையில் பலம் சேர்க்கும்விதமாகவும், கூடுதலாக சுழற்பந்துவீச்சுக்கும் மொயின் அணியில் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.

அதே வேறு... இது வேறு...

இது குறித்து, இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் கூறுகையில், “மொயின் அலி, அணியில் சேர்க்கப்படுவது குறித்து யோசித்துவருகிறோம். ஜோ ரூட்டும், நானும் கலந்தாலோசித்து மேற்கொண்டு முடிவெடுப்போம்.

அவர் சிறந்த வீரர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஹண்ட்ரட் (HUNDRED) தொடரில் நல்ல ஃபார்மில் இருந்தாலும், டெஸ்ட் போட்டி என்பது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது" என்றார். இதற்கு முன்னர், இந்தியாவிற்கு எதிரான போட்டிகளில் ஜோ ரூட்டை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்களும் ரன் குவிக்க வேண்டும் என்று சில்வர்வுட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நாடே எங்களை வரவேற்றது போல் இருந்தது - கேப்டன் மன்பிரீத்

Last Updated : Aug 11, 2021, 7:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details