லண்டன்:ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம் வரும் 19ஆம் தேதி துபாயில் நடக்க உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணி வீரரும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டிலை வெளியிட்டது. இதன் மூலம் 10 அணிகளில் 77 வீரர்களின் தேவை உள்ளது. இதனையடுத்து 1166 வீரர்கள், ஐபிஎல் மினி ஏலத்திற்கு தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் 2024 ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, உடற்தகுதியை மீட்டெடுக்கவும், தனது பணிச்சுமையைக் குறைக்கவும். ஐபிஎல் புறக்கணிக்குமாறு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஜோஃப்ரா ஆர்ச்சரை கேட்டுக் கொண்டுள்ளது.
2022 ஐபிஎல் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியால் 8 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சரை. எதிர்பார்த்த அளவிற்கு விளையாட காரணத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிரேட் முறையில் மூலம் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்த வீரர்களின் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.