தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மூவர் ஐவர் ஆனோம் - மகிழ்ச்சியில் தினேஷ் கார்த்திக்! - தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - தீபிகா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

DK
DK

By

Published : Oct 29, 2021, 1:26 PM IST

சர்வதேச கிரிக்கெட் முதல் உள்ளூர் ஐபிஎல் தொடர்கள் வரை முன்னணி வீரராக திகழ்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் கார்த்திக். இவர் கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாது சமீபத்தில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராகவும் வலம் வந்தார்.

தினேஷ் கார்த்திக் பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிக்கல்லை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தற்போது அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

இதை தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அதில், "எனக்கும் தீபிகாவுக்கும் இரண்டு அழகான ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதன் மூலம் எங்கள் குடும்பத்தினரின் எண்ணிக்கை மூன்றிலிருந்து 5 ஆக அதிகரித்துள்ளது. இவர்களின் பெயர் கபீர், ஜியான்" எனப் பதிவிட்டுள்ளார்.

தினேஷ் கார்த்தியின் இந்தப் பதிவை தொடர்ந்து பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 'தினேஷ் கார்த்திக்கின் அந்த ஆட்டம் இந்தியாவின் சிறப்பான ஆட்டங்களில் ஒன்று'

ABOUT THE AUTHOR

...view details