டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி, இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த நிலையில் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலும் , துணை கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணியில் ரிதுராஜ் கேக்வாத், ரிஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர், ஹர்ஷல் பட்டேல், ஆவேஷ் கான் மற்றும் ஐபிஎல் தொடரில் கலக்கிய அர்ஷ்தீப் சிங், 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.