ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐசிசி ஒரு நாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் தவான், ஐயர் முன்னேற்றம் - ஐசிசி ஒரு நாள் பேட்ஸ்மேன் தரவரிசை

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒரு நாள் போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய பேட்ஸ்மேன்கள் தவான் மற்றும் ஐயர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

Dhawan, Iyer move up in ICC ODI rankings
Dhawan, Iyer move up in ICC ODI rankings
author img

By

Published : Jul 27, 2022, 9:42 PM IST

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் ஷிகர் தவான், முதல் ஆட்டத்தில் 97 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அதே போல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் மற்றும் இரண்டாவது ஆட்டத்தில் அரை சதங்கள் விளாசியிருந்தார்.

இதன் மூலம் ஷிகர் தவான் தரவரிசையில், ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 13ஆவது இடத்திற்கும், ஸ்ரேயாஸ் ஐயர் 20 இடங்கள் முன்னேறி 54ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அதே போன்று இரண்டாவது ஆட்டத்தில் சதம் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் 3 இடங்கள் முன்னேறி 12ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க: 'தினசரி பயிற்சியே வெற்றிக்கு வித்தாகும்' - கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் அறிவுரை!

ABOUT THE AUTHOR

author-img

...view details