தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பிரபல தென் ஆப்பிரிக்க வீரர்! - ஓய்வு முடிவை அறிவித்த டீன் எல்கர்

Dean Elgar: தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனான டீன் எல்கர், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Dean Elgar
Dean Elgar

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 7:35 PM IST

செஞ்சூரியன்: இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமனில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று (டிச.21) ஒருநாள் தொடர் முடிவடந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.

இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னால் கேப்டனும், பேட்டருமான டீன் எல்கர், இந்தியாவுடன் நடைபெறும் டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து டீன் எல்கர் கூறியதாவது, “சர்வதேச கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடியதை பாக்கியமாக கருதுகிறேன். இத்தனை ஆண்டுகள் எனது கிரிக்கெட் பயணம் மிக அழகாக அமைந்தது. எல்லா விஷயங்களும் ஒரு நாள் முடிவுக்கு வரும். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியே எனது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும்.

இந்த அழகான போட்டியிலிருந்து நான் ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன். கேப் டவுன் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியே, எனது கடைசி போட்டி. கேப் டவுன் மைதானம்தான் எனக்கு உலகிலேயே பிடித்த மைதானம். எனது முதல் டெஸ்ட் ரன் கேப் டவுன் மைதானத்தில் இருந்துதான் வந்தது. எனது கடைசி டெஸ்ட் ரன்களும் அங்கிருந்துதான் வரப்போகிறது" என்றார்.

இது தொடர்பாக தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருப்பதாவது, “இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அவரது சொந்த மண்ணான செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது. 2வது டெஸ்ட் போட்டி, அவர் டெஸ்ட்டில் அறிமுகமான கேப் டவுன் மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும், தென் ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் டீன் எல்கர், சர்வதேச கிரிக்கெட் பயணத்தை சரியான இடத்தில் முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்" என தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணிக்காக டீன் எல்கர் இதுவரை 84 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 13 சதங்கள், 28 அரைசதங்கள் உள்பட மொத்தம் 5,146 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர், 104 ரன்களும் எடுத்துள்ளார். மேலும், 17 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியதில் 9 வெற்றிகள், 6 தோல்விகள் மற்றும் 2 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தூத்துக்குடி வெள்ளத்தில் மூழ்கிய வீடு.. வேதனையிலும் இன்று புரோ கபடியில் களமிறங்கும் தமிழக வீரர் மாசானமுத்து!

ABOUT THE AUTHOR

...view details