விராட் கோலி தலைமையிலான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. இதில், நான்காம் வரிசையில் பேட்டிங் செய்வதற்காக அம்பதி ராயுடுவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியத் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் அவரை அணியில் இருந்து நீக்கினார்.
அவருக்குப் பதிலாக, தமிழக வீரரும் ஆல்ரவுண்டருமான விஜய் சங்கர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கூறுகையில்,
2017-ல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் முடிவடைந்தப் பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் நான்காவது வரிசையில் பேட்டிங் செய்ய ராயுடுவிற்கு பொதுமான வாய்ப்புகளை வழங்கினோம். அவர் பேட்டிங் மற்றும் பீல்டிங் மட்டுமே செய்யக்கூடியவர். ஆனால் விஜய் சங்கரிடம், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று அம்சங்கள் ( டைமென்ஷன்) உள்ளது.