12ஆவது உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை முக்கிய அணி நிர்வாகங்கள் அறிவித்துள்ள நிலையில், தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அந்த அணிக்கு வழக்கம்போல் சர்ஃபராஸ் அஹ்மத் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பேட்ஸ்மேன்களில் அபித் அலி, பாபர் அஸாம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபக்கர் ஜமான், ஹாரிஸ் சோஹைல், இமாம் உல் ஹக் மற்றும் அனுபவ வீரர்கள் சோயப் மாலிக், ஹஃபீஸ் இடம்பெற்றுள்ளனர்.