2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. உலகக்கோப்பையில், 2003இல் நடந்த தொடருக்குப்பின் 2011ஆம் ஆண்டு நடந்த தொடர்தான் இந்திய ரசிகர்களை மிகவும் ஈர்த்தது.
அதற்கு முக்கிய காரணம், 28 வருடங்களுக்கு (1983) பிறகு இந்தியா உலகக்கோப்பையை வென்றது! கிரிக்கெட்டின் கடவுள் சச்சினின் கனவும் அப்போதுதான் நிறைவேறியது.சொந்த மண்ணில் தொடரைக் கைப்பற்ற முடியுமாஎன்ற சவாலில் இந்தியா வெற்றிபெற்றதற்குபல்வேறு காரணங்கள் உள்ளன.
இந்தத் தொடரில், இந்திய அணி காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதியது. பெரும்பாலானா 90'ஸ் கிட்ஸ், இந்தப் போட்டியைக் காலிறுதிப் போட்டியாக பார்க்காமல், 2003 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது இறுதிப் போட்டியாகவே பார்த்தனர்.
பிரயாக்ராஜில் (அப்போதைய அகமதாபாத்) நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் வாட்சன் விக்கெட்டை வீழ்த்துவதற்காகவே, தோனி அஷ்வினை களமிறக்கினார். அதன் பலன், விரைவில் கிட்டியது. பவர்-பிளே ஓவரில் வாட்சனை அஷ்வின் போல்ட் ஆக்கினார்.
இருப்பினும், அதுவரை அந்தத் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிக்கி பாண்டிங், அந்தப் போட்டியில் சதம் விளாசி அசத்தினார். இறுதியில் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய அணி 261 ரன்களை டார்கெட்டாக நிர்ணயம் செய்தது.
இந்திய அணிக்கு சேவாக், டெண்டுல்கர் வழக்கம்போல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அந்தத் தொடரில் அதுவரை எதிர்கொண்ட முதல் பந்துகளை பவுண்டரிகளாக பறக்க விட்ட சேவாக், அந்தப் போட்டியில் பிரட் லீயின் பந்தை டிஃபென்ஸ் ஷாட் ஆடினார். ஆனால், அடுத்த ஓவரில் சச்சின் தனது முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசினார். சேவாக்கை விடவும், சச்சின் ஷாட் ஆடுவதில் மிகவும் கான்ஃபிடென்ட்டாக இருந்தார்.