தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்கள் இவர்கள்தான்: பிசிசிஐ - இந்திய அணி

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக கலீல் அகமது, நவ்தீப் சைனி, தீபக் சஹார், ஆவேஷ் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்கள்

By

Published : Apr 16, 2019, 9:45 AM IST

12-வது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், கே.எல்.ராகுல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்:விராட் கோலி(கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஜடேஜா, விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ், சாஹல்

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களின் பெயர்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதில், கலீல் அகமது, நவ்தீப் சைனி, தீபக் சஹார் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணிக்கு உதவுவார்கள் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்ட நான்கு வீரர்களும் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் வெவ்வேறு அணிகளில் விளையாடி வருகின்றனர். இதில் குறிப்பாக, நவ்தீப் சைனி, மற்றும் தீபக் சஹார் ஆகியோர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வலைப்பந்துவீச்சாளர்கள் விவரம்:

  1. கலீல் அகமது ( ஹைதராபாத்)
  2. நவ்தீப் சைனி ( பெங்களூரு)
  3. தீபக் சஹார் ( சென்னை)
  4. ஆவேஷ் கான் ( டெல்லி)

ABOUT THE AUTHOR

...view details