தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கம்பிரின் உலகக் கோப்பைக்கான இந்திய அணி இதுதான்! - Gambhir

மும்பை: உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தான் விரும்பும் இந்திய அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் தேர்வு செய்துள்ளார்.

கம்பிரின் உலகக் கோப்பைக்கான இந்திய அணி இதுதான்!

By

Published : Apr 15, 2019, 11:50 AM IST

12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதற்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணிப் பட்டியல் இன்று மதியம் 3 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் தனக்கு பிடித்த 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை தேர்ந்தெடுத்துள்ளார்.

அதில், சஞ்சு சாம்சன், நவ்தீப் சைனி, இவர்களுடன் அஷ்வினை இவர் தேர்வு செய்தது மட்டுமின்றி ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோரை கழட்டி விட்டது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக இவர் சஞ்சு சாம்சனை டிக் செய்துள்ளார்.

கம்பீர் தேர்வு செய்த அணி: விராட் கோலி, ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, கே.எல் ராகுல், தோனி, கேதர் ஜாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, நவ்தீப் சைனி.

முன்னதாக, ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் சதம் அடித்தார். அப்போது, சஞ்சு சாம்சன்தான் தற்போது இருக்கும் சிறந்த இந்திய விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் என கம்பீர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி 2011-ல் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றுவதற்கு கவுதம் கம்பிர் மிக முக்கிய காரணமாக இருந்தார். 275 ரன் இலக்குடன் ஆடிய இந்திய அணியில் அவர் அடித்த 97 ரன்கள் மிகவும் ஸ்பெஷலான இன்னிங்ஸில் ஒன்று.

ABOUT THE AUTHOR

...view details