12ஆவது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30 முதல் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளின் வீரர்கள் பட்டியல் வெளியான நிலையில், வங்கதேச அணிக் குழு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொர்டசா தலைமையிலான வங்கதேச அணியில், புதுமுக வீரர் அபு ஜெயத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான அபு ஜெயத் வங்கதேச அணிக்காக இதுவரை ஐந்து டெஸ்ட் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 15 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
காயம் காரணமாக உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முஸ்தாபிஸூர் ரஹ்மான் இடம்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அணியில் தனது இடத்தை கெட்டியாக பிடித்துள்ளார்.