தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IND vs ENG LIVE Score: இந்தியா அபார வெற்றி! இங்கிலாந்தை ஊதித் தள்ளியது! - ஒருநாள் உலக கோப்பை 2023

england won toss choose to bowl first
england won toss choose to bowl first

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 1:57 PM IST

Updated : Oct 29, 2023, 9:48 PM IST

21:42 October 29

IND vs ENG LIVE : புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

21:40 October 29

IND vs ENG LIVE : பும்ரா, ஷமி அபாரம்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

21:38 October 29

IND vs ENG LIVE : 129 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டிய இந்திய வீரர்கள்!

இங்கிலாந்து அணி 34 புள்ளி 5 ஓவர்களில் 129 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்தை 129 ரன்களில் இந்திய வீரர்கள் சுருட்டினர்.

21:38 October 29

IND vs ENG LIVE : இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

19:57 October 29

IND vs ENG LIVE Score: ஜோஸ் பட்லர் அவுட்!

குல்தீப் யாதவ் பந்து வீச்சில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்தார்.

19:41 October 29

IND vs ENG LIVE Score: 13 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து!

இங்கிலாந்து அணி 13 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்கள் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் மற்றும் மொயின் அலி களத்தில் உள்ளனர்.

19:22 October 29

IND vs ENG LIVE Score: ஷமிக்கு 2வது விக்கெட்!

ஏற்கனவே பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை வீழ்த்திய முகமது ஷமி, தற்போது ஜானி பேரிஸ்டோவ் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 40 ரன்களை சேர்த்துள்ளது.

19:14 October 29

IND vs ENG LIVE Score: பென் ஸ்டோக்ஸ் அவுட்!

போட்டியின் 8வது ஓவரை வீசிய முகமது ஷமி, பென் ஸ்டோக்ஸை வீழ்த்தியுள்ளார். 10 பந்துகளை சந்தித்த அவர் எவ்வித ரன்களும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

19:08 October 29

IND vs ENG LIVE Score: 7 ஓவர்கள் முடிவில்!

இங்கிலாந்து அணி 7 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட்கள் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது. ஜானி பேரிஸ்டோவ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் களத்தில் உள்ளனர்.

18:58 October 29

IND vs ENG LIVE Score: அடுத்த விக்கெட்!

பும்ரா பந்து வீச்சில் விழ்ந்த ஜோ ரூட். தான் சந்தித்த முதல் பாலே அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.

18:54 October 29

IND vs ENG LIVE Score: ஆட்டமிழந்தார் டேவிட் மலான்!

5வது ஓவரை வீசிய பும்ரா, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டேவிட் மலான் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அவர் 17 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார்.

18:43 October 29

IND vs ENG LIVE Score: 3 ஓவர்கள் முடிவில்!

இங்கிலாந்து அணி 3 ஓவர்கள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் சேர்த்துள்ளது.

18:40 October 29

IND vs ENG LIVE Score: களமிறங்கியது இங்கிலாந்து அணி!

230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது இங்கிலாந்து அணி. தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் விளையாடி வருகின்றனர்.

17:58 October 29

IND vs ENG LIVE Score: இங்கிலாந்து அணிக்கு 330 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்துள்ளது.

17:38 October 29

IND vs ENG LIVE Score: சூர்யகுமார் யாதவ் அவுட்!

போட்டியின் 47வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். 49 ரன்கள் எடுத்த அவர் டேவிட் வில்லி பந்து வீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.

17:11 October 29

IND vs ENG LIVE Score: 7வது விக்கெட்டை கைப்பற்றிய இங்கிலாந்து!

இந்திய வீரர் முகமது ஷமி, மார்க் வீசிய பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

17:06 October 29

IND vs ENG LIVE Score: அடுத்த விக்கெட்!

அடில் ரஷித் வீசிய 41 ஓவரில், ஜடேஜா ஆட்டமிழந்தார். அவர் 13 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே சேர்த்தார்.

17:02 October 29

IND vs ENG LIVE Score: 40 ஓவர்கள் முடிவில்!

40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்துள்ளது.

16:48 October 29

IND vs ENG LIVE Score: ரோகித் சர்மா அவுட்!

தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா, 101 பந்துகளில் 87 ரன்கள் எடுத்த நிலையில், அடில் ரஷித் பந்து வீச்சில் லிவிங்ஸ்டோனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

16:38 October 29

IND vs ENG LIVE Score: சதத்தை நெருங்கும் ரோகித்!

இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோகித் சர்மா 96 பந்துகளில் 85 ரன்கள் குவித்து சதத்தை நெருங்கி வருகிறார்.

16:19 October 29

IND vs ENG LIVE Score: கே.எல்.ராகுல் அவுட்!

58 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்த கே.எல்.ராகுல் டேவிட் வில்லியின் பந்து வீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

15:57 October 29

IND vs ENG LIVE Score: 25 ஓவர்கள் முடிவில் இந்தியா!

போட்டியின் 25 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்கள் இழப்பிற்கு 100 ரன்களை சேர்த்துள்ளது இந்திய அணி. ரோகித் சர்மா 57 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 30 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.

15:36 October 29

IND vs ENG LIVE Score: நிதானமான ஆட்டத்தில் இந்தியா!

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 73 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 44 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 16 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.

15:13 October 29

IND vs ENG LIVE Score: 16 ஓவர்கள் முடிவில் இந்தியா!

இந்திய அணி 16 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்கள் இழப்பிற்கு 55 ரன்கள் சேர்த்துள்ளனர். ரோகித் சர்மா 37 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 5 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.

15:03 October 29

IND vs ENG LIVE Score: இந்தியாவின் ரன்ரேட்!

14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 49 ரன்கள் எடுத்துள்ளது. ரன்ரேட் 3.5 ஆக உள்ளது.

14:55 October 29

IND vs ENG LIVE Score: கிறிஸ் வோக்ஸுக்கு 2வது விக்கெட்!

12வது ஓவரை வீசிய கிறிஸ் வோக்ஸ் தனது 2வது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறியுள்ளார்.

14:47 October 29

IND vs ENG LIVE Score: பவர்ப்ளே முடிவில் இந்தியா!

போட்டியின் 10 ஓவர்கள் முடிந்த நிலையில், இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 35 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. களத்தில் ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளனர்.

14:40 October 29

IND vs ENG LIVE Score: மீண்டும் மெய்டன் ஓவர்!

போட்டியின் 9 ஓவரை வீசிய டேவிட் வில்லி, மெய்டனாக வீசிய உள்ளார். இதுவரை அவர் வீசிய 5 ஓவர்களில் 2 ஓவர்களை மெய்டனாக வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

14:33 October 29

IND vs ENG LIVE Score: விராட் கோலி டக் அவுட்!

தொடக்க வீரரான சுப்மன் கில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், அதன்பின் களம் இறங்கிய விராட் கோலியும் எந்த ரன்னும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.

14:25 October 29

IND vs ENG LIVE Score: 5 ஓவர்கள் முடிவில்!

இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளனர்.

14:20 October 29

IND vs ENG LIVE Score: முதல் விக்கெட்!

கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் சுப்மன் கில் போல்ட் ஆனார். அவர் 9 ரன்கள் மட்டுமே சேர்த்து வெளியேறியுள்ளார்.

14:15 October 29

IND vs ENG LIVE Score: 3 ஓவர்கள் முடிவில்!

இந்திய அணி 3 ஓவர்கள் முடிவில், 22 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 17 ரன்களுடனும், கில் 5 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.

14:08 October 29

IND vs ENG LIVE Score: முதல் ஓவர் மெய்டன்!

முதல் ஓவரை வீசிய இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி, எவ்வித ரன்களும் விட்டுக்கொடுக்காமல் வீசியுள்ளார்.

14:00 October 29

IND vs ENG LIVE Score: களமிறங்கியது இந்திய அணி!

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கியுள்ளனர்.

13:35 October 29

IND vs ENG LIVE Score: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு!

லக்னோ: ஐசிசி உலக கோப்பை தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தொடரின் 29வது லீக் ஆட்டம் லக்னோவின் ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய - இங்கிலாந்து அணிகள் பலபரீட்சை நடத்துகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11

இந்தியா: ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(விகீ), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(கேப்டன் & விகீ), லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட்.

Last Updated : Oct 29, 2023, 9:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details