ஹைதராபாத்: நடப்பாண்டு உலக கோப்பை தொடர் கிட்டதட்ட பாதி கிணற்றை தாண்டி உள்ள நிலையில், இந்திய அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இருப்பினும் அனைத்து போட்டிகளிலும் வெற்ற பெற்ற இந்திய அணி, நெட் ரன்ரேட்டில் தென் ஆப்பிரிக்கா அணியை விட பின்தங்கியே உள்ளது. ஆனால் தென் ஆப்பிரிக்கா அணியானது, இந்திய அணியை விட ஒரு போட்டி குறைவாக வெற்றி பெற்றுள்ளனர். இந்த நெட் ரன்ரேட் விவகாரம் லீக் போட்டியின் முடிவில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே நெட் ரன்ரேட் ஆனது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது பற்றியது தான் இந்த தொகுப்பு.
உலக கோப்பை வரலாற்றில் நெட் ரன்ரேட்டால் (NRR) அரையுறுதிக்கு முன்னேற முடியாமல் போன அணிகள் பல இருக்கின்றன. நடப்பாண்டு உலக கோப்பையில், இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளிலுமே வென்று +1.353 என்ற நெட் ரன்ரேட்டுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இருப்பினும், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் +2.370 மற்றும் +1.481 என இவர்களை விட ஒரு போட்டி அதிகம் வென்ற இந்திய அணியை விட சிறந்த நெட் ரன்ரேட்டை கொண்டுள்ளனர்.
The NRR calculation formula is as follows:
நெட் ரன் ரேட் = அடித்த மொத்த ரன்கள் / சந்தித்த மொத்த ஓவர்கள் - விட்டுக்கொடுக்கப்பட்ட மொத்த ரன்கள் / இன்னிங்ஸின் மொத்த ஓவர்கள்.
உதாரணத்திற்கு நடப்பாண்டு உலக கோப்பையில் இதுவரை இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சை எடுத்துக் கொள்வோம்.
இந்திய அணி தனது முதல் ஐந்து போட்டிகளில் அடித்த ரன்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக - 41.2 ஓவர்களில் 201/4
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக - 35 ஓவர்களில் 273/2
பாகிஸ்தானுக்கு எதிராக - 30.3 ஓவர்களில் 192/3
வங்கதேசத்திற்கு எதிராக - 41.3 ஓவர்களில் 261/3
நியூசிலாந்துக்கு எதிராக - 48 ஓவர்களில் 274/6
மொத்தமாக 1,201 ரன்கள், 196 ஒவர் 2 பந்துகளில் ( கணக்கீடுகளுக்காக 196.33 ஓவர்கள் என எடுத்துக்கொள்வோம்)
ரன்கள் விகித கணக்கீடு = 1201/196.33 = 6.117.
நடந்துக்கொண்டிருக்கும் ஒருநாள் உலக கோப்பையில் முதல் ஐந்து போட்டிகளில் இந்திய அணி விட்டுக்கொடுத்த ரன்கள்:
ஆஸ்திரேலியா - 49.3 ஓவர்களில் 199