ஹைதராபாத்: உலக கோப்பை தொடங்கி 12 எடிசன்கள் முடிவடைந்த உள்ளது. ஒவ்வொறு எடிசனிலும் வெற்றி பெற்ற அணிகளில் குறிப்பிட்ட ஒரு வீரர் சிறப்பாக செயல்பட்டு இருப்பார். அது பேட்டராகவோ அல்லது பவுளராகவோ இருக்க கூடும். அதே சமயம் சில எடிசன்களில் கோப்பையை வெல்லாத அணிகளில் இருந்தும் சில வீரர்கள் சிறப்பாக விளையாடி இருப்பார்கள். உதாரணத்திற்கு 2003ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது பெற்று இருப்பார். ஆனால் அந்த தொடரில் வெற்றி பெற்றதோ ஆஸ்திரேலியா அணி.
இந்நிலையில், உலக கோப்பையின் 13வது தொடங்கி உள்ளது. இதில் பல முன்னனி வீரர்களுக்கு இந்த உலக கோப்பை கடைசியாக இருக்கும். அதே நேரம், இளம் வீரர்கள் பலர் அவர்களது திறமையை நிரூபிக்க வாய்ப்பு உள்ளது. உலக கோப்பை தொடர்களில் சிறப்பாக செயல்பட்டவர்கள் பற்றி பேசுகையில், 1992ம் ஆண்டு முதலே தொடர் நாயகனை தேர்ந்தேடுக்கும் முறை தொடங்கியது. அதனை பற்றியது தான் இந்த தொகுப்பு.
1992 உலகக் கோப்பை - மார்ட்டின் குரோவ்
1992ம் ஆண்டு உலக கோப்பை அஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தியது. இந்த தொடரின் இறுதி போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றியது. ஆனால் அந்த தொடரில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவ் அதிக ரன்கள் அடித்து "தொடர் நாயகன்" விருதை தட்டி சென்று அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.
9 போட்டிகளில் விளையாடிய மார்ட்டின் குரோவ் 456 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதம் மற்றும் 4 அரை சதங்கள் அடங்கும். உலக கோப்பை வரலாற்றில் தொடர் நாயகனாக தேர்வான ஒரே கேப்டன் மார்ட்டின் குரோவ் அவார். இந்த தொடரில் மூன்று முறை "மேன் ஆஃப் தி மேட்ச்" பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2016ம் ஆண்டு மார்ச் 3 அன்று உடல் நல குறைவால் ஆக்லாந்தில் காலமானார்.
1996 உலக கோப்பை - சனத் ஜெயசூர்யா
இந்த உலக கோப்பையில் ஆசிய அணிகளில் ஒன்றான இலங்கை அணி கோப்பையை கைபற்றியது. இந்த உலக கோப்பையில், தொடக்க வீரர்களான சனத் ஜெயசூர்யா மற்றும் ரொமேஷ் கலுவிதாரண ஆகியோர் முதல் 10 ஓவர்களில் ஒரு அணி எவ்வளவு வேகமாக ரன்களை சேர்க்க வேண்டும் என்பதை உலகிற்கு கற்றுக் கொடுத்தனர். இடது கை பேட்டரான சனத் ஜெயசூர்யா விளையாடிய 6 போட்டிகளில் 221 ரன்கள் குவித்தது மட்டுமல்லாமல் 7 விக்கெட்கள் மற்றும் 5 கேட்ச்களை எடுத்தார். இதன் மூலம் அந்த எடிசனின் தொடர் நாயகன் விருதை பெற்றார். இந்த தொடரில் அவர் 2 மேன் அஃப் தி மேட்ச் விருதை கைபற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1999 உலக கோப்பை - லான்ஸ் க்ளூஸ்னர்
இதுவரை நடைபெற்ற 12 எடிசன்களில் தென் ஆப்பிரிக்காவால் கோப்பையை கைப்பற்றவில்லை என்றாலும், 1999ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் இந்த அணி பெறும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. லான்ஸ் க்ளூஸ்னரின் சிறந்த ஆட்டத்தால் அந்த அணி அரைஇறுதி வரை முன்னேறியது. அந்த உலக கோப்பையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்திய லான்ஸ், விளையாடிய 9 போட்டிகளில் 8 இன்னிங்ஸில் 281 ரன்கள் குவித்து பந்து வீச்சிலும் 17 விக்கெட்களை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு கடைசி ஓவரில் 9 மட்டுமே தேவைபட்டது. அதே நேரம் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற ஒரு விக்கெட் தேவைபட்டது. லான்ஸ் க்ளூஸ்னர் மற்றும் ஆலன் டொனால்ட் களத்தில் இருந்தனர். ஆனால் டொனால்ட் ரன் அவுட் ஆனார். ஒருவேளை ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால், லான்ஸ் க்ளூஸ்னர் தனது அணியை இறுதி போட்டிக்கு கொண்டு சென்று இருப்பார். இருப்பினும் அந்த எடிசனின் "தொடர் நாயகன்" விருதை லான்ஸ் க்ளூஸ்னர் பெற்றார்.
2003 உலக கோப்பை - சச்சின் டெண்டுல்கர்