தென் ஆப்பிரிக்கா அணி 83 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இதனால் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
IND VS SA Live Score: தென் ஆப்பிரிக்கா அணி ஆல் அவுட்.. 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி! - world cup 2023
Published : Nov 5, 2023, 2:55 PM IST
|Updated : Nov 5, 2023, 8:34 PM IST
20:26 November 05
IND VS SA Live Score: 83 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்!
20:10 November 05
IND VS SA Live Score: 25 ஓவர்கள் முடிவில்!
தென் ஆப்பிரிக்கா அணி 25 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்கள் இழப்பிற்கு 78 ரன்கள் சேர்த்துள்ளது.
20:00 November 05
IND VS SA Live Score: ஜடேஜாவுக்கு 4வது விக்கெட்!
சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா இந்த போட்டியில் 4வது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். கேசவ் மகாராஜ் 7 ரன்கள் எடுத்த நிலையில், இவர் பந்தில் போல்ட் ஆனார்.
19:51 November 05
IND VS SA Live Score: மில்லர் காலி!
ஜடேஜா பந்து வீச்சில் டேவிட் மில்லர் ஆட்டமிழந்தார். ஏற்கனவே 5 விக்கெட்களை இழந்த நிலையில், தற்போது 6வது விக்கெட்டையும் இழந்து பரிதாப நிலையில் உள்ளது.
19:36 November 05
IND VS SA Live Score: ஷமிக்கு 2வது விக்கெட்!
வென் டர் டுசென் 32 பந்துகளை எதிர்கொண்டு 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஷமியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
19:29 November 05
IND VS SA Live Score: 4வது விக்கெட்!
தென் ஆப்பிரிக்கா அணி தனது 4வது விக்கெட்டை இழந்துள்ளது. ஹென்ரிச் கிளாசென் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறியுள்ளார்.
19:24 November 05
IND VS SA Live Score: 12 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா!
12 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி, 12 விக்கெட்கள் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
19:15 November 05
IND VS SA Live Score: மார்க்ரம் அவுட்!
ஏற்கனவே 2 விக்கெட்கள் இழந்த நிலையில், தற்போது எய்டன் மார்க்ரம் விக்கெட்டையும் இழந்துள்ளது தென் ஆப்பிரிக்கா அணி. முகமது ஷமியின் பந்து வீச்சில் அவர் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியுள்ளார்.
19:07 November 05
IND VS SA Live Score: அடுத்த விக்கெட்!
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்தர ஜடேஜா பந்து வீச்சில் டெம்பா பவுமா போல்ட் ஆனார். அவர் 11 ரன்கள் மட்டுமே சேர்த்து வெளியேறியுள்ளார்.
18:37 November 05
IND VS SA Live Score: ஆட்டமிழந்தார் டி காக்!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரரான குயிண்டன் டி காக் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
18:29 November 05
IND VS SA Live Score: களமிறங்கியது தென் ஆப்பிரிக்கா!
327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கி உள்ளது. தொடக்க வீரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா விளையாடி வருகின்றனர்.
17:57 November 05
IND VS SA Live Score: தென் ஆப்பிரிக்கா அணிக்கு 327 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை லீக் அட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 326 ரன்கள் குவித்துள்ளது.
17:39 November 05
IND VS SA Live Score: விராட் கோலி சதம்!
சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதம் அடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
17:35 November 05
IND VS SA Live Score: ஆட்டமிழந்தார் சூர்யகுமார் யாதவ்!
கே.எல்.ராகுல் ஆட்டமிழந்த பின் களம் புகுந்த சூர்யகுமார் யாதவ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.
17:06 November 05
IND VS SA Live Score: கே.எல்.ராகுல் அவுட்!
மார்கோ ஜான்சன் பந்து வீச்சில் கே.எல்.ராகுல், வென் டர் டுசென்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
16:32 November 05
IND VS SA Live Score: 35 ஓவர்கள் முடிவில்!
இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட்கள் இழப்பிற்கு 219 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் 70 ரன்னும், விராட் கோலி 67 ரன்னும் எடுத்து களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
16:13 November 05
IND VS SA Live Score: ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்!
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசியுள்ளார்.
16:00 November 05
IND VS SA Live Score: கோலி அரைசதம்!
தொடக்க வீரரான ரோகித் சர்மா ஆட்டமிழந்த பின் களம் வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி தனது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
15:41 November 05
IND VS SA Live Score: நிதானமான ஆட்டத்தில் இந்தியா!
இந்திய அணி 22 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட்கள் இழப்பிற்கு 133 ரன்கள் சேர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறது.
15:05 November 05
IND VS SA Live Score: 14 ஓவர்கள் முடிவில் இந்தியா!
போட்டியின் 14 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 103 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
14:54 November 05
IND VS SA Live Score: 2வது விக்கெட்!
மகாராஜ் பந்து வீச்சில் இந்திய தொடக்க வீரர் சுப்மன் கில் போல்ட் ஆனார்.
14:49 November 05
IND VS SA Live Score: 10 ஓவர்கள் முடிவில்!
இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் சேர்த்துள்ளது.
14:30 November 05
IND VS SA Live Score: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!
கொல்கத்தா: ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 36 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று அதன் 37வது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகின்றது.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர். இந்த ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ரபாடா பந்து வீச்சில் ரோகித் சர்மா, டெம்பா பவுமாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 24 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி - சுப்மன் கில்லுடன் கைகோர்த்து விளையாடி வருகிறார்.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11
இந்தியா:ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விகீ), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக் (விகீ), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி.