சென்னை: ஐசிசி உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியாக ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இதில் வரலாற்று சிறப்புமிக்க ஆட்டத்தை வெளிபடுத்தி இந்திய அணிக்கு முதல் வெற்றியை பெற்று தந்தது விராட் கோலி - கே.எல்.ராகுல் ஜோடி. எப்போதெல்லாம் இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில், இருக்கிறதோ அப்போதெல்லாம் தனது அருமையான ஆட்டத்தை வெளிபடுத்தி அணிக்கு உறுதுணையாக நின்றுள்ளார் கோலி.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் என இருவருமே டக் ஆவுட் ஆகினர். சரி அடுத்து வரும் ஷ்ரேயாஸ் ஐயராவது - கோலியுடன் சேர்ந்து நிலைபார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவரும் வார்னரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். இப்படி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்ததும், மைதானமே நிசப்தமாகி போனது.
ஆனால் களத்தில் கோலி என்ற ஒரே ஒரு நம்பிக்கை மட்டும் மீதம் இருந்தது. இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளை அவரது 15 வருட கிரிக்கெட் வாழ்வில் நிறைய பார்த்துள்ளார். அடுத்து சில ஓவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்ப்பது போல் இருந்தது. எகப்பட்ட டாட் பால்கள், சிறுதி நேரத்திற்கு அவரது ஸ்ட்ரைக் ரேட் 50க்கு குறைவாகவே இருந்தது.
இதற்கிடையில், 8வது ஓவரில் ஹெசில்வுட் வீசிய ஹாட் பாலை கோலி தூக்கியடிக்க முயன்றார். பந்து காற்றில் பறந்தது. அந்த 2 - 3 நொடிகள் ஓட்டுமொத்த மைதானமே உறைந்து போனது. ஆனால் கேட்ச்சை மிட்செல் மார்ஸ் நழுவ விட்டார். அது ரசிகர்களுக்கு சந்தோஷம் ஆனால், அதை மார்ஸ் எப்போது எல்லாம் நினைத்து பார்க்கிறாரோ அப்போதெல்லாம் அந்த கேட்ச்சை நினைத்து ஒரு நிமிடம் வருந்த கூடும்.
இலக்கு எளிது என்று நினைத்தவர்களுக்கு ஆஸ்திரேலியா அணியின் பெளலர்கள் பெரும் அதிர்ச்சியை கண்முன் காட்டினர். ஆனால் அவர்களுக்கு முன் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினார் கோலி. பல பந்துகளை வெல் லெஃப்ட் செய்தார். இந்த இன்னிங்ஸில் மட்டும் அவர் 50க்கும் மேற்பட்ட பந்துகளை டாட் செய்துள்ளார்.
மறுபுறம் கே.எல்.ராகுல் இவரை பற்றி பேசியே ஆக வேண்டும். தனது சிறப்பான ஆட்டத்தை ஆடி கோலிக்கு கைகொடுத்தார். ஒரு பக்கம் விராட் கோலி விக்கெட்டை இழக்காமல் காத்து கொண்டிருந்த நேரத்தில் ஓரளவு அணிக்கு ரன்களை உயர கே.எல்.ராகுல் காரணமாக இருந்தார். உலக கோப்பைக்கு முன் அவர் மேல் பல விமர்சனங்கள். அவரை போல் விமர்சிக்கபட்ட ஆல் இல்லை என்று கூட சொல்லலாம். அவரின் அணுகுமறை குறித்து, அவரின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து என பல விமர்சனங்களுக்கு உள்ளானார். மேலும், அவர்களை எல்லாம் இந்த இன்னிங்ஸ் மூலம் வாய்யடைக்க செய்தார் கே.எல்.ராகுல்.
கிட்டதட்ட 20 ஓவர்களுக்கு மேல் தான் ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. இருவருமே அவர்களது அனுபவத்தை வெளிகாட்டும் வகையில் சிறப்பாக விளையாடினர். பார்ட்னர்ஷிப் 150 ரன்களை ஒருபக்கம் கடக்க, கோலியோ சதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார். முதலில் கிடைத்த அதிஷ்டம் அப்போது கிடைக்கவில்லை. ஹெசில்வுட் அதே ஹாட் பாலை வீச, கோலி புல் ஹாட் அடித்தார். மிட் விக்கெட்டில் இருந்த லபுசேன் கையில் சிக்கியது பந்து. வெளியேறினார் கோலி. இருப்பினும் பரவாயில்லை. ஆட்டத்தை முழுமையாக இந்தியாவின் பக்கம் திருப்பிவிட்டார். ரசிகர்கள் ஆராவராத்துடன் எழுந்து நின்று கைதட்டி கோலி.. கோலி என முழக்கமிட்டனர்.
கோலி சென்றாலும், ராகுல் இறுதி வரை ஆட்டமிழகாமல் நின்று கடைசியாக வின்னிங் ஹாடாக சிக்ஸ் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் 6 உலக கோப்பை அதாவது 1999லிருந்து 2019 வரையில் உலக கோப்பை முதல் போட்டியில் தோற்காத ஆஸ்திரேலிய அணி இம்முறை இந்தியாவால் தோற்கடிக்கப்பட்டது. இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க உலக கோப்பையை தொடங்கிய இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க:ஒருமணி நேரமாவது விளையாடுங்கள் - தங்க மகன் கூறும் வெற்றியின் ரகசியம்