தர்மசாலா: ஐசிசி நடத்தும் 13வது உலக கோப்பை நடைபெற்று வரும் நிலையில், இன்று (அக்.22) இதன் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் அவர் உலக கோப்பையில் இந்திய அணிக்காக அதிக முறை 5 விக்கெட்களை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை அவர் உலக கோப்பையில், 2 முறை 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
உலக கோப்பையில் அதிக முறை 5 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர்கள்
2 - முகமது ஷமி
1 - கபில் தேவ்
1 - வெங்கடேஸ் பிரசாத்
1 - ராபின் சிங்
1 - ஆஷிஷ் நெஹ்ரா
உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள்
44 - ஜாகீர் கான்
44 - ஜவகல் ஸ்ரீநாத்
36 - முகமது ஷமி
31 - அனில் கும்ப்ளே