ஐதராபாத்: ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்கும் இலங்கை அணி தங்களது அணி வீரர்களை தயார் செய்து வருகிறது. இலங்கை அணி சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய மைதாங்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இந்தியன் பிரீமியர் லீக்கில் இலங்கை வீரர்கள் இந்திய மைதானங்களில் தங்களது சிறபான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
ஆகையால் இந்தியாவில் உள்ள மைதாங்னங்கள் குறித்து அவர்களுக்கு நன்கு தெரியும். இதனால், இலங்கை அணியினர் மற்ற அணிகளுக்கு டஃப் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி சார்பில் களமிறங்கவுள்ள ஐந்து முக்கிய வீரர்கள் குறித்து காணலாம்.
1. மகேஷ் தீக்ஷனா (Maheesh Theekshana)
இதன் முதல் வரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா இடம் பெறுகிறார். இலங்கை அணி வீரர்களில் மிக முக்கியமான வீரர் மகேஷ் தீக்ஷனா. தீக்ஷனா, தனது கேரம் பந்தின் மூலம் சுலபமாக விக்கெட் எடுக்கக்கூடியவர். இவரது பந்து வீச்சிற்கு எதிரணி வீரர்கள் தடுமாறுவார்கள். தனது சுழற்பந்தின் மூலம் பேட்ஸ்மென்களை குழப்பமடைய செய்யக்கூடியவர். மேலும், இந்திய மைதானங்களில் அவருக்கு பந்து வீசுவதில் நன்கு அனுபவம் உள்ளது.
மஹேஷ் தீக்ஷன, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். இதுவரை 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எக்கனாமி ரேட் 4.50 ஆக இருந்தது. விக்கெட்டுகளை எடுப்பதோடு, ரன்களையும் கட்டுப்படுத்துவதில் தீக்ஷானா சிறப்பு வாய்ந்தவர்.
2. மதீஷ் பத்திரன (Matheesha Pathirana)
இரண்டாவதாக இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ் பத்திரனா உள்ளார். இலங்கை அணிக்கு மிக முக்கியமான பந்து வீச்சாளராக தொடர்ந்து நிரூபித்து வருகிறார். பத்திரன, லசித் மலிங்கவைப் போல் பந்து வீசுகிறார். பெரிய பேட்ஸ்மென்கள் அவரது யார்க்கர் பந்துகளுக்கு திணறுவார்கள். இந்திய மைதானங்களில் பந்து வீசுவதில் பத்திரனாவுக்கு நிறைய அனுபவம் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும்போது, தனது அனல் பறக்கும் பந்துகளால் உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மென்களை கலங்கடிக்கச் செய்தார். பத்திரன 10 ஒருநாள் போட்டிகளில் 6.6 என்ற எக்கனாமி ரேட்டில், ரன்களை கொடுத்து 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.