சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் நாளை (அக்டோபர் 08) சென்னையில் மோதுகிறது. இந்த ஆட்டமானது இந்திய நேரப்படி, மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தை விலையாடுவதால் இதனை காண்பதற்கு, இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து ரசிகர்கள் சென்னை நோக்கி படை எடுத்துள்ளனர். தற்போது சென்னையில் அவ்வப்போது லேசான மழையானது பெய்து வருகிறது. இதனால் சென்னையில் நாளை நடைபெறும் ஆட்டம் தடைபடுமா என்று சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.
வானிலை: தென்மேற்கு பருவமழை முடிடையும் நிலையில், தற்போது கடந்த சில வாரங்களாக, மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், மேற்கு தொடர்ச்சி மலை தொடர் பகுதிகளான, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மழையானது பெய்தது. இதையும் தாண்டி, சென்னையில், அவ்வப்போது, லேசனா மழை மற்றும் கன மழையானது பெய்து வருகிறது.
மேலும், காற்றின் திசை வேகத்தை வைத்து பார்க்கையில், சென்னையில் மழை என்பது நாளை மாலை பெய்ய வாய்புள்ளது என்று தெரிய வருகிறது. அந்த மழை மேகங்கள் மேற்கில் இருந்து கிழக்கில் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், சென்னை சேப்பாக்கத்தில், மழைக்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது.
மழை பெய்தால் யாருக்கும் வாய்பாக அமையும்: சென்னை சேப்பாக்கம் மைதானம் என்பது, சுழற்பந்து, மற்றும் பேட்டிங்க்கு சாதகமானது. இதில், எளிதாக 250 ரன்கள் வரை எடுக்கலாம். ஆனால், ஒரு வேலை மழையானது பெய்தால், ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களின் பக்கம் அமையும். ஆனால், மைதனாத்தில் மழை பெய்து ஈரமாக இருந்தால், எவ்வளவு தான் பேட்ஸ்மேன் அடித்தாலும், பந்து மைதானத்தில் பயணிப்பது என்பது கடினமானதாக இருக்கும்.