தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

WTC FINAL: குறுக்கே வந்த மழை; முதல் செசனுக்குத் தடை

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மழைக் காரணமாக தாமதமாக தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

wtc 2021, WTC FINAL
Toss delayed, first session rained out

By

Published : Jun 18, 2021, 3:30 PM IST

சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இன்று (ஜூன் 18) சவுத்தாம்ப்டனில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இப்போட்டியைக் காண மைதானத்தில் குறைந்த அளவிலான ரசிகர்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சவுத்தாம்ப்டனில் கனமழை பெய்துவருவதால் இன்றைய ஆட்டத்தின் முதல் செசன் நடைப்பெறாது என போட்டி நடுவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் இங்கிலாந்தின் ஸம்மர்!

இப்போட்டியை கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், டாஸ் போடுவதைக் கூட காணமுடியாது போல என்று சமூகவலைதளங்களில் ரசிகர்கள் தங்களது சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மழையை ரசிக்கும் கிவிஸ்!

இதையும் படிங்க: கோலி vs கேன்; முதல் கோப்பையை முத்தமிடப்போவது யார்?

ABOUT THE AUTHOR

...view details