சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்றும் முன்தினமும்
இறுதிப்போட்டியின் முதல் நாள் (ஜுன் 18) ஆட்டம், மழைக் காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. நேற்று (ஜுன் 19) டாஸ் போடப்பட்டு, இந்தியா முதலில் பேட்டிங் செய்து வந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணத்தினால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று (ஜுன் 20) திட்டமிட்டப்படி மதியம் 3 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.