சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து):இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (ஜுன் 20) அரைமணி நேரம் தாமதமாக தொடங்கியது. இந்திய கேப்டன் விராட் கோலி 44 ரன்களுடனும், துணை கேப்டன் ரஹோனே 29 ரன்களுடனும் இன்றைய ஆட்டத்தைத் தொடங்கினர்.
இன்-ஸ்விங்கிற்கு பலி
இந்நிலையில், கைல் ஜேமீசன் 68ஆவது ஓவரை வீச வந்தார். ஆஃப்-ஸ்டெமிற்கு வெளிப்புறமாக வீசப்பட்ட ஜேமீசனின் முதல் மூன்று பந்துகளை, கோலி தடுப்பாட்டத்தால் எதிர்கொண்டார்.
இம்மூன்று பந்துகளுக்கு பின், நல்ல லெங்த்தில் ஒரு இன்-ஸ்விங் டெலிவரியை வீசினார் ஜேமீசன். இதை லெக்-திசையில் அடிக்க முயன்ற கோலி, இன்றைய நாளில் தனது ரன் கணக்கை தொடங்காமல் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். விராட் கோலிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும், இந்த டீப் இன்-ஸ்விங் பந்தை நேர்த்தியாக வீசி அவரின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் ஜேமீசன்.