சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் புதிய தலைவராக கிரேக் பார்க்லே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் கிரிக்கெட்டின் எதிர்கால திட்டங்கள் பற்றி பேசுகையில், '' உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கப்பட்டதற்கான திட்டம் நிறைவேறவில்லை. கரோனா வைரஸ் பாதிப்பால் பல குழப்பங்கள் நிகழ்ந்துள்ளது.
தற்போதைய கிரிக்கெட் காலெண்டரின் படி நியூசிலாந்து கிரிக்கெட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சில கிரிக்கெட் வாரியங்கள் ஆர்வமாக இருப்பதில் ஆச்சரியமாக உள்ளது. அதைப் பொறுத்தவரையில் பலருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளதாக கருதுகின்றனர். ஆனால் நான் அதனை ஒத்துக் கொள்ள மாட்டேன்.
சில கிரிக்கெட் வாரியங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதில் சில பிரச்னைகள் உள்ளது. ஏனென்றால் பொருளாதார சூழலை வைத்து பார்க்கும்போது, டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதில் பலருக்கும் தடுமாற்றம் உள்ளது. ஆனால் அனைத்து நாடுகளும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் தீவிர கவனம் செலுத்துவது மகிழ்ச்சியை அளிக்கிறது.