2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து, வேல்ஸ் நகரில் நடைபெற்றுவருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் போட்டிகளால் ரசிகர்கள் எதிர்வரும் போட்டிகளை ஆவலுடன் நோக்கியுள்ளனர். இதில் இந்திய அணி நாளை தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
இந்திய அணியின் செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்த ஊடகங்கள்! - ஊடகங்கள்
லண்டன்: உலகக்கோப்பைத் தொடரின் நாளையப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய அணி ஆடவுள்ள நிலையில், இந்திய அணியின் செய்தியாளர் சந்திப்பை ஊடகங்கள் புறக்கணித்துள்ளன.
இந்திய அணி
இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற இருந்தது. அதில் இந்திய மூத்த வீரர்கள் அல்லது பயிற்சியாளர்கள் யாரேனும் கலந்துகொள்வார்கள் என பத்திரிக்கையாளர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்திய அணியின் காத்திருப்போர் பட்டியலில் உள்ள வீரர்களான கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் விரக்தியடைந்த பத்திரிக்கையாளர்கள் இந்திய அணியின் செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்துச் சென்றனர்.