பந்தை சேதப்படுத்தியப் புகாரில் ஒரு வருட தடைக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள ஸ்டீவ் ஸ்மித்தை ரசிகர்கள் சீட்டிங் சீட்டிங் என குரலெழுப்பி ஸ்லெட்ஜிங் செய்துவருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் இந்த ஸ்லெட்ஜிங் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஆட்டத்திலும் இது எதிரொலித்தது.
ஸ்டீவ் ஸ்மித்திற்கு துணைநின்ற கோலி! - விராட் கோலி
லண்டன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற போட்டியின்போது ரசிகர்கள் ஸ்டீவ் ஸ்மித்தை ஸ்லெட்ஜிங் செய்ததற்கு, கோலி ஸ்டீவ் ஸ்மித்திற்காக ஆதரவு கோரிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
steve smith
இப்போட்டியிலும் ரசிகர்கள் ஸ்மித்தை ஸ்லெட்ஜிங் செய்தபோது, களத்திலிருந்த இந்திய கேப்டன் விராட் கோலி ரசிகர்களிடம் ஸ்டீவ் ஸ்மித்தை ஆதரிக்குமாறு செய்கை செய்தார்.
அதற்கு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கோலிக்கு நன்றி தெரிவித்துச் சென்றார். ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஆதரவாக விராட் கோலி துணை நின்ற சம்பவம் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரிடமும் வரவேற்பை பெற்றுவருகிறது.