தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'ராயுடு ட்விட்டில் தவறு இல்லை..!' - விஜய் சங்கர் ஓபன் டாக் - vijay shanakr

"உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களுக்குத் ஒரு கிரிக்கெட் வீரர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் எப்படி உணர்வார்கள் என்று எனக்கு தெரியும்" என்று ராயுடுவின் ட்விட்டுக்கு விஜய் சங்கர் பதிலளித்துள்ளார்.

ராயுடு

By

Published : May 25, 2019, 9:18 PM IST

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ராயுடுவுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், விஜய் சங்கரின் மூன்று டைமன்ஷன் (பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்) விளையாட்டால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என விளக்கமளித்தார்.

இதற்கு ராயுடு தனது ட்விடட்ர் பக்கத்தில், "உலகக்கோப்பையை பார்ப்பதற்காக 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்துள்ளேன்" எனப் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இதுகுறித்து எவ்வித பதிலும் அளிக்காமல் தவிர்த்து வந்த விஜய் சங்கர், தற்போது மனம் திறந்துள்ளார்.

பதில் ட்விட்டில், "முக்கிய தொடர்களின் போது ஒரு கிரிக்கெட் வீரர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் எவ்வாறு உணர்வார்கள் எனபது எனக்குத் தெரியும். அவர் தவறாக எதுவும் பதிவிடவில்லை என்று நினைக்கிறேன். ஐபிஎல் தொடரின்போது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விஜய் சங்கர் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details