தனது ட்விட்டர் பக்கத்தில் சமயோஜிதமாக ட்வீட் செய்து மக்களை கவர்வதில் மும்பை காவல் துறை கில்லாடி. இதற்கு முன்னும் பல சுவாரஸ்யமான ட்வீட்களை செய்திருந்தாலும் உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் டக்வத் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் செய்த ட்வீட் மக்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
முன்னதாக இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடங்கும் முன் பச்சை நிறப் போக்குவரத்து விளக்கை பதிவிட்டு, "பச்சை தெரிகிறதே?, இப்போது இந்தியா வேகமெடுக்க வேண்டும்" என்று ட்வீட் செய்தனர்.