தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முதல் வெற்றி யாருக்கு? தென் ஆப்பிரிக்க - ஆப்கானிஸ்தான் பலப்பரீட்சை - Afghanistan

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.

cricket

By

Published : Jun 15, 2019, 2:25 PM IST

உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோல்வியைத் தழுவியது. அதைத் தொடர்ந்து வங்கதேசம், இந்திய அணிக்கு எதிரான ஆட்டங்களிலும் தோல்வி என ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. தென் ஆப்பிரிக்க அணி இதுவரை ஆடிய நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வி, வெஸ்ட் இண்டீஸ் எதிரான போட்டி மழையால் ரத்து என புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் உள்ளது.

முந்தைய தொடர்களில் பலம் பொருந்திய அணியாக வலம்வந்த தென் ஆப்பிரிக்க அணி, நடப்புத் தொடரில் தொடர் தோல்விகளால் பேரடியை வாங்கி உள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயின் தொடரின் தொடக்கத்திலேயே காயம் காரணமாக வெளியேறியது, மேலும் அந்த அணியில் ஆம்லா, டிகாக், மில்லர், டு ப்ளஸிஸ் போன்ற அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும் அந்த அணி ரன் குவிக்க தடுமாறிவருவது உள்ளிட்ட காரணங்களை குறிப்பிடலாம்.

இதேபோன்று கத்துக்குட்டி அணியாக தொடரில் களமிறங்கியுள்ள ஆப்கானிஸ்தான் அணியும் ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து கடைசி இடத்தில் உள்ளது. மேலும் முதல் இரண்டு போட்டிகளில் களமிறக்கப்பட்ட அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஷேஷாத் காயம் காரணமாக நீக்கப்பட்டதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து தான் ஃபிட்டாக இருப்பதாக ஷேஷாத் தெரிவித்தார். இதுபோன்ற பிரச்னைகளும் அந்த அணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இன்று கார்டிஃப் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இரு அணியும் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்க உள்ளன. இருநாட்டு ரசிகர்களும் தங்களின் அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details