லண்டனில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் 44 ஆவது லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைக் குவித்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மேத்யூவ்ஸ் 113 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இந்தியாவின் ஹிட்மேனின் அடுத்த சாதனை - rohit sharma
இந்தியா இலங்கை அணிகளுக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் 'ஹிட்மேன்' என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா சதம் விளாசி சாதனை படைத்தார்.
இதைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தது. இலங்கை அணி வீரர்களின் பந்துவீச்சை பந்தாடிய ரோகித் சர்மா -லோகேஷ் ராகுலும் இணைந்து 187 ரன்களை குவித்தனர். இந்நிலையில், இந்திய அணியின் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா 92 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து சதம் விளாசினார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடர் ஒன்றில் 5 சதங்கள் அடித்து ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். 103 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டம் இழந்தார்.