உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா - தவான் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்திய அணி முதல் 5 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
இந்தியா அசத்தல் தொடக்கம் - ஆஸிக்கு எதிராக ரோஹித் படைத்த புதிய சாதனை - உலகக்கோப்பை கிரிக்கெட்
லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதன்பின் தங்களது ஸ்டைலில் பேட்டிங் செய்யத் தொடங்கிய இருவரும் அவ்வபோது பவுண்டரிகளை அடித்து ரசிகர்களை உற்சாகமடையச் செய்தனர். ரோஹித் 24 ரன்கள் அடித்திருந்தபோது, மேக்ஸ்வெல் வீசிய 13ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஒரு ரன் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தனது 2000ஆவது ரன்னை நிறைவு செய்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக குறைந்த இன்னிங்ஸில் (37) இரண்டாயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை ரோஹித் படைத்தார். தொடர்ந்து ஆடிய ரோஹித் அரை சதமும், தவான் சதமும் அடித்து அசத்தினர்.