இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து - இந்தியா அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து சேஸிங்கை தொடங்கிய இந்திய அணி 4ஆவது ஓவரிலேயே 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின்னர் வந்த வீரர்கள் சொதப்பினாலும் தொடர்ந்து நிலைத்து ஆடிய தோனி-ஜடேஜா இணை சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தது.