தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் சோயிப் மாலிக்...

லண்டன்: பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் சோயிப் மாலிக், சர்வதேச ஒரு நாள் கிரிகெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிதார் சோயிப் மாலிக்.

By

Published : Jul 6, 2019, 3:08 PM IST

லண்டன் லார்ட்ஸ் மைதானதில் நோற்று நடந்த உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் , வஙாளதேசம் அணிகள் மோதின. இதில் 94 ரன்கள் விதியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

உலகக்கோப்பையுடன் சோயிப் மாலிக்.

அதன்பின் அந்த அணியின் அணுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் சோயிப் மாலிக்(37) செய்தியாளர்களை சந்தித்த போது, சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து விடை பெறுவதாக அறிவிதார்.

”2019 உலகக்கோப்பையில் பாகிஸ்தானின் கடைசி ஆட்டத்தோடு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என நினைத்தேன். இது நான் பல வருடங்களுக்கு முன்பே எடுத்த முடிவு தான். இன்றுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன்.

எனது குடும்பதாருடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன். அதுபோல டி20 போட்டிகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். 2020ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் நிச்சயம் இடம் பிடிப்பேன்” என கூறினார்.

மொத்தம் 287 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சோயப் மாலிக், 9 சதங்கள், 44 அரைசதங்களை அடித்து 7,534 ரன்களையும், 158 விகெட்டுகளையும் எடுத்துள்ளார்.


நடப்பு உலகக்கோப்பை தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே இடம் பிடித்திருந்தார். நேற்று நடைபெற்ற கடைசி ஆட்டதில் அவர் பங்கு பெறவில்லை.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details