உலகக் கோப்பைக்காண இந்திய அணி அறிவிக்கப்படும்போதே மயங்க் அகர்வால் அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விஜய் சங்கர் காயம் காரணமாக உலகக்கோப்பைத் தொடரிலிருந்து விலகியதால் மாற்று வீரராக மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய அணி வீரர் மயங்க் அகர்வால் இதுகுறித்து மயங்க் அகர்வால் ஈ டிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில்,..
"கடந்த ஒரு வருடமாகவே நான் நல்ல பார்மில் தான் இருக்கிறோன். உள்ளூர் போட்டிகளில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். அணி தேர்வைப் பொறுத்தவரை வீரர்களால் எதுவும் செய்ய முடியாது. நான் இப்போதைக்கு எனது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் என்றார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயலுடன் மயங்க் அகர்வால் மேலும் " ஓரிரு வருடங்களுக்கு முன்னர் அனைத்து பந்துகளையும் அடித்து ஆட வேண்டும் என நினைப்பேன். ஆனால் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் ஆடுவதால் இப்போது எனது ஆட்டத்தில் முதிர்ச்சி ஏற்பட்டுள்ளது" என்றார்.
யுவராஜ் சிங்குடன் மயங்க் அகர்வால் ஐபிஎல் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு, " எங்களைப் போல வளர்ந்து வரும் வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. அதில் எங்களால் விராட் கோலி, டி வில்லியர்ஸ் போன்ற அனுபவ வீரர்களுடன் ஓய்வறையை பகிர்வதால் ஆட்ட நுணுக்கங்களை எளிதில் கற்றுக்கொள்ள முடிகிறது" என்று கூறினார்.
பஞ்சாப் வீரர் ராகுலுடன் இந்திய அணி வீரர் மயங்க் அகர்வால் மயங்க் அகர்வால் உள்ளூர் போட்டிகளில் ஒரே வருடத்தில் 3000 ரன்களைக் கடந்துள்ளார். இதற்கான திட்டமிடலைப் பற்றிக் கூறிய அவர், "எனக்கான இலக்குகளை நான் வார இலக்கு மாத இலக்கு என்று வரையறுத்துக்கொள்வேன். தினமும் அதை முடிப்பதற்காகவே விளையாடுவேன்" என்றார்.