தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சதமடித்து அசத்திய லிசெல் லீ... அரையிறுதியை நோக்கி தென் ஆப்பிரிக்கா! - மகளிர் உலகக்கோப்பை டி20

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 11ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

Lizelle Lee's maiden T20I ton sets up facile SA win
Lizelle Lee's maiden T20I ton sets up facile SA win

By

Published : Feb 28, 2020, 4:33 PM IST

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி - தாய்லாந்து அணியை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீராங்கனை லிசெல் லீ அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, எதிரணி பந்துவீச்சாளர்களை அச்சத்தில் ஆழ்தினார்.

அவருடன் ஜோடி சேர்ந்த சுனே லூஸும் தனது பங்கிற்கு பந்துவீச்சாளர்களை பந்தாடினார். தொடர்ந்து அதிரடியில் மிரட்டி வந்த லிசெல் லீ, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை அடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து சுனே லூஸுன் தனது நான்காவது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார்.

சதமடித்த மகிழ்ச்சியில் லிசெல் லீ

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 195 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லிசெல் லீ 101 ரன்களையும், சுனே லூஸ் 61 ரன்களை எடுத்தனர்.

அதனையடித்து களமிறங்கிய தாய்லாந்து அணி, தொடக்கம் முதலே எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 19.1 ஓவர்களிலேயே தாய்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்களை மட்டுமே எடுத்தது.

பவுண்டரி விளாசும் சுனே லூஸ்

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, இத்தொடரில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. தென் ஆப்பிரிக்க அணிக்காக சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்திய லிசென் லீ ஆட்டநாயகி தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:மகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேச்சை தெறிக்கவிட்ட ஆஸி.

ABOUT THE AUTHOR

...view details