தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'ஒரு சதம் கூட அடிக்கல.. ஆனா தரவரிசையில் 'கிங்'! - இதுதான் கோலியின் மேஜிக்!

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

முதலிடத்தை தக்க வைத்த 'கிங்' கோலி

By

Published : Jul 15, 2019, 10:21 PM IST

கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில், இங்கிலாந்து அணி பவுண்டரிகளின் அடிப்படையில் சாம்பியன் பட்டத்தை வென்றது.இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதிச் சுற்றொடு நடையைக் கட்டியது. பல்வேறு திருப்புமுனைகளுடன் இந்த தொடர் முடிந்த நிலையில், ஐசிசி தற்போது ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், வழக்கம் போல முதலிடத்தில் இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 886 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.அவர் உலகக் கோப்பை தொடரில் ஒரு சதம் அடிக்க வில்லை என்றாலும், தொடர்ந்து ஐந்து அரைசதங்களை அடித்து சாதனைப் படைத்திருந்தார். அவரைத் தொடர்ந்து, இந்தத் தொடரில் ஐந்து சதம் அடித்து புதிய சாதனைப் படைத்த ஹிட்மேன் 881 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.

ரோகித் ஷர்மா

இந்த தொடரில், இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த ஜெசன் ராய், முதல்முறையாக 10ஆவது இடத்தை பிடித்துள்ளார்.அதேபோல், இறுதி போட்டியில் மாஸ் காட்டிய பென் ஸ்டோக்ஸ் ஐந்து இடங்கள் முன்னேறி 694 புள்ளிகளுடன் 20ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

வில்லியம்சன்

நியூசிலாந்து அணி தனது சிறப்பான கேப்டன்ஷிப் மூலம் வழிநடத்தி அணியை இறுதிச் சுற்றுவரை கொண்டு சென்ற கேன் வில்லியம்சன் தொடர்நாயகன் விருதை வென்றார். இதனால், இவர் தனது வாழ்கையில் 799 புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளார். பிட்ஸ் அன்ட் பீசஸ் ஆஃப் பிளேயர் என சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்த ஜடேஜா, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 77 ரன்கள், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தக்க பதிலடி தந்தார். இதன் பலனாக, அவர் 24 இடங்கள் முன்னேறி 108ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஜடேஜா

இதைத்தொடர்ந்து, பந்துவீச்சாளர்கள் பட்டியலில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இவர், இந்த தொடரில் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் 18 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியின் டிரெண்ட் போல்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த தொடரின் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு துருப்புச்சீட்டாக செயல்புரிந்த ஆர்ச்சர் 13 இடங்கள் முன்னேறி 29ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

ஆர்ச்சர்

அதேபோல், அரையிறுதி, இறுதிப் போட்டியில் அசத்திய கிறிஸ் வோஸ்க்ஸ் ஆறு இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தை பிடித்துள்ளார்.ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இந்த தொடரில் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் ஆடிய வங்கதேச வீரர் ஷகிப் 406 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details