இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடும் என்ற நம்பிக்கையில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னதாகவே, இப்போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கியிருந்தனர். ஆனால், இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, தொடரிலிருந்து வெளியேறியது.
மறுமுனையில், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து 27 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கிரிக்கெட்டின் மெக்கா எனப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.