தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நான்கு ரன்களை திரும்பப் பெறுமாறு நடுவரிடம் கேட்ட ஸ்டோக்ஸ்! - England

லண்டன்: உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீரர் கப்தில் எறிந்த பந்து ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றபோது அந்த ரன்களை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் கள நடுவரிடம் கூறியதாக ஆண்டர்சன் தெரிவித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

லண்டன்

By

Published : Jul 17, 2019, 5:19 PM IST

2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜூலை 14ஆம் தேதி நடைபெற்றது. அதில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் அடித்த பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று முதன்முதலாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்தப் போட்டியின் இறுதி நிமிடங்களில் கப்தில் ரன் அவுட் செய்ய முயன்றதில், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றதால் இங்கிலாந்து அணிக்கு 4 ரன்கள் வழங்கப்பட்டது.

இது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், அந்த 4 ரன்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் கள நடுவரிடம் கேட்டதாகவும், அதற்கு நடுவர் மறுத்ததாகவும் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ரசிகர்களிடயே வரவேற்பை பெற்று வருகிறது.

ஸ்டோக்ஸ்

முன்னதாக இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதுபெற்று பேசியபோது, ’என் வாழ்நாள் முழுவதும் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்பேன்’ என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்டர்சன்

ABOUT THE AUTHOR

...view details