நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.
இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், இஷாந்த் சர்மா தனது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் பங்கேற்கமாட்டார் என தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அல்லது நவ்தீப் சைனி அணியில் இடம்பெறுவர் என தெரிவித்தார்.