உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பவுண்டரிகள் அடிப்படையில் நியூசிலாந்து அணியை வெற்றிகண்ட இங்கிலாந்து அணி முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்தப் போட்டிக்கு இது காரணம், அது காரணம் என்று பலரும் கூறிவந்தாலும் தற்போது புதிய காரணம் ஒன்று கிடைத்துள்ளது.
ஆம் அது என்னவென்றால் நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியைக் காண வந்திருந்த ஒரு தாத்தா-தான் காரணாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குக் காரணம் 'டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷல்' என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியான அந்தப் புகைப்படம்தான் இந்த கேள்வியை நமக்குள் எழச்செய்துள்ளது.