தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சீருடை சர்ச்சை - இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் விளக்கம்! - bleed blue

லன்டண்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மாறவிருக்கும் இந்திய அணியின் சீருடை குறித்த சர்ச்சைக்கு பந்துவீச்சு பயிற்சியாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் விளக்கம்!

By

Published : Jun 26, 2019, 8:45 PM IST

உலகக்கோப்பை தொடரில் 30ஆம் தேதி நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி காவி நிறத்தில் களமிறங்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்திய அணியின் புதிய சீருடை என்று வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் பல்வேறு கேலி, கிண்டல்களுக்கும் ஆளானது.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் எந்த வண்ண சீருடையில் களமிறங்குவோம் என எங்களுக்கு இதுவரை தெரியாது. நாங்கள் அதைப் பற்றி பெரிய அளவு சிந்திக்கவில்லை. எங்கள் கவனம் முழுவதும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நாளை நடைபெறவுள்ள போட்டியில் தான் உள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details