துபாய்: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி, மழை காரணமாக டிரா செய்யப்பட்டது.
இரண்டு ஓவர்கள் குறைவு
2019-2021 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை நியூசிலாந்து அணி வென்றதை அடுத்து, 2021-2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் (2021-2023 cycle) இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து தொடங்கியது.
இத்தொடரில் முதல் ஆட்டம் டிராவானதால் இரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் தலா நான்கு புள்ளிகளைப் பெற்றது. இந்நிலையில், முதல் போட்டியில் இரு அணிகளும் தலா இரண்டு ஓவர்களை குறைவாக வீசியதாக ஐசிசி ஆட்ட நடுவர் கிறிஸ் பிராட் தெரிவித்தார்.
இதனால், இரு அணிகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் குறைக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது. மேலும், இரு அணி வீரர்களுக்கும் ஆட்ட ஊதியத்திலிருந்து 40 விழுக்காடு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆகியோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விலகும் ரவி சாஸ்திரி... என்ட்ரி தருகிறாரா ராகுல் டிராவிட்?