உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்க அணி விளையாடியது. இதில் டாஸை வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 308 ரன்களை எடுத்தது.
உலகக்கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இம்ரான் தாஹிர்! - pakistan south africa match
லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையை இம்ரான் தாஹிர் பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக், ஃபக்கர் சமான் ஆகியோரை வீழ்த்தியதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை இம்ரான் தாஹிர் படைத்தார். இதுவரை உலகக்கோப்பை தொடர்களில் தென்னாப்பிரிக்க வீரர் ஆலன் டொனால்டு 25 போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார். இன்று தாஹிர் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 20 போட்டிகளில் 39 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
இந்த சாதனையை படைத்தவுடன் தனது பாணியில் லார்ட்ஸ் மைதானத்தை வலம்வந்து கொண்டாடியது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.