உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்தநிலையில், ஒருநாள் போட்டிக்கான அணிகளின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. 44 ஆண்டு கனவாக இருந்த உலகக் கோப்பையை தனது சொந்த மண்ணில் தூக்கி சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து அணி மீண்டும் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
உலகக்கோப்பையோடு முதலிடம் சென்ற இங்கிலாந்து!
ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிக்கான அணிகளின் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
முதலிடத்துக்கு முன்னேறிய இங்கிலாந்து
125 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்திலும், 122 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. இவர்களை தொடர்ந்து, உலகக் கோப்பையில் ஃபைனல் வரை சென்று கோப்பையை இழந்த நியூசிலாந்து அணி 113 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. முன்னதாக லீக் சுற்றில் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால், முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.