இதுகுறித்து, ஆறு முறை உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “உலகக்கோப்பை தொடரில் இந்திய மக்களின் எதிர்பார்ப்பை இந்திய அணி நிச்சயம் பூர்த்தி செய்யும். உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணிதான் அனைவருக்கும் விருப்ப அணியாக உள்ளது. அதேபோல் இந்திய அணியும் விருப்ப அணியாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
‘கோலியின் கேப்டன்சியை ஐபிஎல் தொடரை வைத்து ஒப்பிடுவது தவறு’ - சச்சின்! - விராட் கோலி
இந்திய கேப்டன் விராட் கோலியின் கேப்டன்சி தகுதியை ஐபிஎல் தொடரை வைத்து ஒப்பிடுவது தவறு என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் கேப்டன்சி தகுதியை ஐபிஎல் தொடரோடு ஒப்பிடுவது தவறான ஒன்று. ஐபிஎல் தொடர் என்பது வெளிநாட்டு வீரர்களுடன் இளம் வீரர்கள் விளையாடுவது. ஆனால், சர்வதேச கிரிக்கெட் அப்படியில்லை. எனவே விராட் கோலியின் கேப்டன்சியை ஒப்பிடுவது சரியாகாது. அதேபோல் அவருக்கு உறுதுணையாக தோனி இருக்கிறார். அனுபவம் வாய்ந்த தோனியின் ஆலோசனைகள் இந்திய அணிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
தோனியின் சாகசங்கள் விக்கெட் கீப்பிங்கில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதேபோல் விராட் கோலி மட்டும் நன்றாக ஆடினால் உலகக்கோப்பையை வெல்ல முடியாது. அனைத்து வீரர்களும் நன்றாக விளையாட வேண்டும். ஓரிரு போட்டிகளில் மட்டுமே ஒரு வீரர் மட்டும் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி வெற்றிபெற முடியும். ஆனால் உலகக்கோப்பை போன்ற தொடர்களில் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்” என கூறினார்.